மின்சாரத் துறைக்கான கோல் இந்தியாவின் நிலக்கரி விநியோகத்தில் 8 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகம் குறைந்துள்ளதால் மின்சார உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
ஹைலைட்ஸ்
- 2018 ஏப்ரல் - அக்டோபரில் 276.8 மில்லியன் டன் நிலக்கரி சப்ளை செய்யப்பட்டிருந்தது.
- 2020-21 நிதியாண்டில் 750 மில்லியன் டன் அளவு நிலக்கரியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு நிலக்கரிச் சுரங்கப் பணியில் ஈடுபட்டுவரும் அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா நிறுவனம், சர்வதேச அளவில் நிலக்கரி உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவில் உள்ள மின்சார உற்பத்தி ஆலைகளுக்குத் தேவையான நிலக்கரியை விநியோகம் செய்து வருகிறது.