உண்மையில் விரதங்கள் மொத்தம் எத்தனை? சாஸ்திரப்படி எந்த விரதத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும்?
செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, சனி விரதம் இப்படி ஏராளமான விரதங்கள் இருப்பார்கள். ஆனால் உண்மையில் சாஸ்திரப்படி விரதங்கள் எத்தனை வகை, எந்தெந்த விரதங்களை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.

 


​இந்து சாஸ்திரமும் விரதங்களும்


இந்து மதத்தில் இதுவரை நீங்கள் அறிந்திராத விரத வகைகளும் அதன் முக்கியத்துவமும் நமது இந்து மதம் ஏகப்பட்ட சடங்குகளையும் மரபுகளையும் உள்ளடக்கிய ஒன்று


. இதனால் தான் நமது நாட்டில் பல புனித விழாக்களாக இருக்கட்டும் கடவுள் வழிபாடாக இருக்கட்டும் எல்லாரும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளையும் விரதங்களையும் மேற்கொள்ளுவார்கள். இருப்பினும் பெரும்பாலான மக்களுக்கு இந்த விரத முறைக்கு பின்னால் இருக்கும் அறிவியல் என்னவோ தெரிவதில்லை. இதை அவர்கள் நமது முன்னோர்களின் வழித்தோன்றலாக மட்டுமே பார்க்கின்றனர்.


விரதம் என்றாலே ஒரு நாள் முழுவதும் சாப்பிடாம இருந்து கடவுளை வழிபாடு செய்ய வேண்டும் என்பதே மக்களின் புரிதலாக உள்ளது. ஆனால் உண்மையில் இதற்கு பின்னால் இருக்கும் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.


அப்படி தெரிந்து கொண்டால் ஒவ்வொரு வழிபாட்டை யும் நாம் இன்னும் கூடுதல் நம்பிக்கையுடன் பின்பற்றி வருவோம் அல்லவா. அதனால் தான் இங்கே பல்வேறு விதமான விரத முறைகளை பற்றியும் அதன் முக்கியத்துவத்தை பற்றியும் காணப் போகிறோம்.