பிரதமர் மோடி பேசியதாவது: பொருளாதார இலக்குகளுக்கு நாம் முக்கியத்துவம்

மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மான் தலைமையில், ஜி - 20 நாடுகளின் அவசரக் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நேற்று(மார்ச் 26) நடந்தது. இதில், துவக்க உரையாற்றிய, முகமது பின் சல்மான், கொரோனாவால் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, கொரோனாவால், வளரும் நாடுகள் சந்தித்துள்ள சுகாதார பிரச்னைகள், பொருளாதார பாதிப்புகளுக்கு உதவ, உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தார்.


 

இந்த சந்திப்பில் பிரதமர் மோடி பேசியதாவது: பொருளாதார இலக்குகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதை விட, மனிதர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஒருங்கணைந்து செயல்பட வேண்டும். இப்போது, கொடூர தொற்று வியாதியால், உலகமே பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், உலக சுகாதார அமைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.