கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகள், குறிப்பாக, ஏழை நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்த நெருக்கடியை குறைக்க, ஜி - 20 நாடுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். மக்களின் நலனுக்காக, உலகம் முழுதும் ஒன்றாக செயல்பட வேண்டும். மருத்துவ ஆராய்ச்சிகளை, அனைத்து நாடுகளும் சுதந்திரமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.
சீன அதிபர், ஜின்பிங் பேசியதாவது: கொரோனா வைரஸ், உலகளவில், இதுவரை இல்லாத அளவில், சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து, சர்வதேச அளவில் போர் தொடுக்க வேண்டும். கொரோனா பரவலுக்கு எல்லைகள் கிடையாது. இது, நம் பொது எதிரி. இதற்கு எதிராக, நாம் ஒருங்கிணைந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.